இந்தியாவிலேயே முதன்முறை.. 42 கோடி ரூபாய் செலவில் பார்முலா ரேஸிங் சர்க்யூட் 2023.. அமைச்சர் உதயநிதி அறிவிப்பு.!

தமிழகத்தில் ஏற்கனவே செஸ் ஒலிம்பியாட் போட்டி, சர்வதேச ஸ்குவாஷ் போட்டி, ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி கோப்பை போட்டிகள், சர்வதேச அலைச்சறுக்கு போட்டி ஆகிய சர்வதேச விளையாட்டு போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்றன.
இந்த சர்வதேச போட்டிகளை தொடர்ந்து அடுத்ததாக ரேஸிங் பிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தியாக , சர்வதேச பார்முலா ரேஸிங் சர்க்யூட் சென்னையில் நடைபெற உள்ளது.
இதனை நேற்று நடைபெற்ற ‘பார்முலா ரேஸிங் சர்க்யூட் 2023’ அறிமுக விழாவில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். இந்த போட்டிக்காக 42 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், வரும் டிசம்பர் 9, 10ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்த போட்டியானது சென்னை தீவுத்திடலை சுற்றி 3.5 கிமீ தூரத்திற்கு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே முதன் முறையாக பார்முலா ரேஸிங் சர்க்யூட் சென்னையில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.