7 அடி உயரம்… 450 கிலோ எடை.! டி.எம்.சௌந்தராஜனுக்கு வெண்கல சிலை திறந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.!  

MK Stalin - TMS

முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தென் தமிழகம் வந்துள்ளார். அவர் நேற்று மாலை, மறைந்த திரைப்பட பாடகர் கலைமாமணி டி.எம்.சௌந்தரராஜன் அவர்களின் முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைத்தார்.

கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், டி.எம்.சௌந்தரராஜன் அவர்களுக்கு மதுரையில் சிலை நிறுவப்படும் என அறிவித்து இருந்தார். இந்த சிலை அமைப்பதற்கு 50 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த சிலையானது 7அடி உயரம் கொண்டது, 450 கிலோ எடையுள்ள சிலையாகும். இந்த சிலையானது மதுரை கிழக்கு மண்டல அலுவலக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது.

இந்த சிலை திறப்பு விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சிலை திறந்து, டி.எம்.சௌந்தரராஜன் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். உடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, மூர்த்தி, சாமிநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்