#BREAKING: அரசு பள்ளி, மாணவர்களுக்கு இலவச டேப் .., ஸ்டாலின் அறிவிப்பு..!

அரசு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு டேப்லெட் வழங்கப்படும் என முக ஸ்டாலின் அறிவித்தார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது கூட்டணி முடித்ததை தொடர்ந்து, வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், திமுக சார்பில் நேற்று வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று திமுகவின் தேர்தல் அறிக்கையை முக ஸ்டாலின் அறிவித்தார்.
அதில், எட்டாம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப்பாடம் ஆக்கப்படும். ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகளுக்கு உணவு கொடை திட்டம். பள்ளிகளில் காலையில் மாணவர்களுக்கு பால் வழங்கப்படும் எனவும், அரசு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு டேப்லெட் வழங்கப்படும் என அறிவித்தார். மேலும், நீட் தேர்வை ரத்து செய்ய முதல் பேரவை கூட்டத்தொடரில் சட்டம் இயற்றப்படும் என்று கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!
May 13, 2025
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025