குமாரபாளையம் சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தாய் மகேஸ்வரியும் கைது செய்யப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சார்ந்த கூலி தொழிலாளி ஒருவருக்கு 3 மகள்களும், 1 மகனும் உள்ளனர். இதில் 2 மகள்களுக்கும் திருமணம் நடந்து விட்டது. 3-வது மகள் (வயது 14) இவர் அருகில் உள்ள ஒருவரின் வீட்டுக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார். இதனால், தனது அக்கா வீட்டில் தங்கிகொண்டு வீட்டு வேலைக்கு சென்றுள்ளார்.
இதற்கிடையில், அக்கா கணவன் சின்ராஜ் மற்றும் சிறுமி வேலைக்கு சென்ற அந்த வீட்டின் உரிமையாளர் உட்பட 12 பேர் தொடர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து வந்த்துள்ளனர். சிறுமியை பாலியல் வன்கொடுமையை நடப்பதை அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில் 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தாய் மகேஸ்வரியும் உடந்தையாக இருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது. பலாத்காரம் தொடர்பாக 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் தாய் உட்பட 12 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளன. தப்பி ஓடிய முருகன் என்பவரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…