அதிரடியாக குறைந்தது தங்கம் விலை! இன்றைய நிலவரம் இதோ!

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,14,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Hero Image

சென்னை : தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் நீடித்து வரும் நிலையில், இன்று (ஏப்ரல் 20) சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது.சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.1,14,400-க்கும், கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.14,300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று முன்தினம் ரூ.1,14,880-க்கு விற்பனையான தங்கம், நேற்று ரூ.1,13,680-க்கு குறைந்திருந்தது. ஆனால் இன்று மீண்டும் ரூ.480 குறைந்துள்ளது. இந்த இறக்கம் நகைப் பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகளிடையே சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.18 கேரட் தங்கம் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.125 குறைந்து ரூ.11,855-க்கும், ஒரு சவரன் ரூ.1,000 குறைந்து ரூ.94,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலையில் மாற்றம் இல்லை

தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று எந்த மாற்றமும் இல்லாமல் நீடிக்கிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.280-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,80,000-க்கும் விற்பனையாகிறது.

கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் நிலையில், இன்றைய இறக்கம் சந்தையில் சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் ரூபாய் மதிப்பு ஆகியவை தங்கம் விலை ஏற்ற இறக்கத்துக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன.நகை வாங்குவோர் இந்த விலைக் குறைவை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.