திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான அரசு மாபெரும் வெற்றியை பதிவு செய்து, கடந்த மே-7 ஆம் தேதியன்று மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். இந்த நிலையில், தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்று 100-வது நாளை இன்று எட்டியுள்ளது. இதற்கு திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கொண்டாடி முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், நேர்மையான அதிகாரிகளை நியமித்து 100 நாட்களாக நல்ல முறையில் ஆட்சி நடக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக அரசின் ஆட்சியை பாராட்டு தெரிவித்துள்ளார். திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது என்றும் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை வரவேற்கிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், திமுக ஆட்சியின் செல்பாடுகள் குறித்து ஆறு மாதங்கள் பிறகுதான் முழுமையாக பேச முடியும் என்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம் பாராட்டுக்குரியது எனவும் கூறினார். சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, இந்தியாவின் 75வது சுதந்திர தின பாஜக லோகோவை வெளியிட்டார். இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு தெரிவித்தார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
திருப்பூர் : மாவட்டம், அவிநாசி அருகே கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா (வயது 27), வரதட்சணை கொடுமை காரணமாக ஜூன்…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் கடந்த ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியாவின் AI-171 விமானம் (போயிங் 787-8…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) சட்டமன்றக் குழு கொறடாவாக உள்ள சேலம் மேற்கு எம்எல்ஏ அருளை மாற்ற…
டெல்லி : இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி (ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 7, 2025, ராஜ்கீர், பீகார்)…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…