குட் நியூஸ்: தமிழகத்தில்100 நாள் வேலை திட்டத்திற்கு அனுமதி .!

தமிழகத்தில், 100 நாள் வேலை திட்டத்திற்கும் , 33% ஊழியர்களுடன் மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் பணியில் இருக்கவும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி உள்ளது. இந்த கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க, மத்திய அரசு கடந்த 24 -ம் தேதி ஊரடங்கு பிறப்பித்தது.இதையெடுத்து ஊரடங்கு நாடு முழுவதும் அமலில் உள்ளது.
சமீபத்தில், மத்திய அரசு சில தொழிற்சாலைகளுக்கு இயங்க விலக்கு அளித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் சில தொழிற்சாலைகள் அனுமதிப்பது தொடர்பாகவும், கொரோனா பரவாமல் இருக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று காலை முதலமைச்சர் பழனிசாமி காணொலி மூலம் தொழிலதிபர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அதன்பின்னர், சுத்திகரிப்பு நிலையங்கள், இரும்பு, சிமெண்ட், பெயிண்ட் உள்ளிட்ட ரசாயன ஆலைகள், போன்றவை தொடர்ந்து இயங்கலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
இந்நிலையில், மத்திய அரசு அறிவிப்பை தொடர்ந்து தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், 33% ஊழியர்களுடன் மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் பணியில் இருக்கவும் அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025