#BREAKING: அனைவருக்கும் நிவாரணம் வழங்க அரசுக்கு உத்தரவிட முடியாது – உயர்நீதிமன்றம் அதிரடி..!

Published by
murugan
  • கொரோனாவால் உயிரிழக்கும் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட முடியாது.
  • மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தும் திட்டங்கள் நீதிமன்ற தலையீடு இல்லாமல் தொடர வேண்டும் என விரும்புகிறோம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கோவையை சார்ந்த பூமிராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு வழக்கு தொடுத்தார்கள். இறந்தவர்களின் உடல்கள் இறுதி சடங்கு செய்ய நிவாரணம் வழங்க வேண்டும், அவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோவை பகுதியில் கொரோனா பரவல் குறையாமல் உள்ளது. இதனால் கூடுதல் மையங்கள் ஏற்படுத்த வேண்டும் என தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த இரண்டு அறிக்கைகளும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணை வந்தது. அப்போது, கோவை உள்ளிட்ட பகுதிகளில் நிலைமை கட்டுக்குள் இருப்பதால் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது. நிவாரணம் வழங்குவது தொடர்பாக அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்தது.

மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தும் திட்டங்கள் நீதிமன்ற தலையீடு இல்லாமல் தொடர வேண்டும் என விரும்புகிறோம். அரசின் கொள்கை முடிவு குறித்த பொதுநல வழக்குகளில் சில விளம்பரத்திற்காக தரப்படுகின்றன என நீதிபதிகள் தெரிவித்தனர். மத்திய, மாநில அரசுகள் பல நிவாரணங்களை வழங்கி வருகிறது. இந்நிலையில், கொரோனாவால் உயிரிழக்கும் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட முடியாது என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

Published by
murugan

Recent Posts

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 hour ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

2 hours ago

“நானே போப்பாக இருக்க விரும்புகிறேன்” – டிரம்பின் வைரல் பதிவு.!

நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…

2 hours ago

“என்னை கொலை செய்ய சதி?” மதுரை ஆதீனம் பரபரப்பு குற்றசாட்டு!

சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…

2 hours ago

”அதிமுகவை பாஜக அடக்கிவிட்டது” – முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்.!

சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…

3 hours ago

5 தீர்மானங்கள்., இனி சென்னை வேண்டாம்., திமுகவினருக்கு பறந்த உத்தரவுகள்!

சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…

3 hours ago