தவறான வழியிலும் சட்டத்திற்கு புறம்பாகவும் எஸ்பி வேலுமணி செயல்பட்டுள்ளார் என தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தகவல்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மிக மோசமான குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தெரிவித்துள்ளது. வேலுமணி மீதான வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனு விவரங்கள் வெளியாகியுள்ளது. அதில், எஸ்பி வேலுமணிக்கு எதிரான வழக்குகளின் விசாரணை நிறைவடைந்து இறுதி அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்றும் கூறியுள்ளது.
வழக்கை இழுத்தடிற்பதற்காக மேல்முறையீட்டு மனுவை எஸ்பி வேலுமணி தாக்கல் செய்துள்ளார் என்றும் தவறான வழியிலும் சட்டத்திற்கு புறம்பாகவும் எஸ்பி வேலுமணி செயல்பட்டுள்ளார் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், எஸ்பி வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு குறித்த மேல்முறையீடு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. சென்னை மாநகராட்சியில் ரூ.114 கோடி மதிப்பு ஒப்பந்தம் பணியில் ரூ.29 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கோவையில் குப்பைகளை அகற்றுவது தொடர்பான ஒப்பந்தங்களில் ரூ.25 கோடி ஏற்பட்டதாக தகவல் கூறப்படுகிறது. 2016-20-ஆம் ஆண்டு வரை எஸ்பி வேலுமணி சுமார் ரூ.58 கோடிக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடுக்கப்பட்டது. 2021-ல் வெளியிடப்பட்ட சிஏஜி அறிக்கையின்படி வேலுமணிக்கு எதிராக முதல் தகவல் பதிவு செய்யபட்டுள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் கொரோனா கட்டுப்பாடுகளால் காணொளி வாயிலாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று முதல் நேரடி விசாரணை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…