அரசு பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவு

this news gives information about Government school teachers and officers are required to verify the assets of the vigilance department

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு “பயோ மெட்ரிக்” வருகை பதிவு முறையை தமிழக அரசு அமல்படுத்தி வருகிறது.  இந்த  “பயோ மெட்ரிக்” வருகை பதிவு முறை படி தினமும் 2 முறை வருகை பதிவை  ஆசிரியர்களும், அலுவலர்களும் பதிவு செய்ய வேண்டும்.

அரசு பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவை எதிர்த்து  வழக்கு தொடரப் பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அரசுப் பணியில் தொடர நினைத்தால் அரசின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும். என கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள் ஆகியோரது சொத்துக்களை சரிபார்க்க வேண்டும் என லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தது.