அனைத்து ஊராட்சிகளிலும் உடற்பயிற்சி கூடங்கள் – ஊராட்சித் துறை அமைச்சர் அறிவிப்பு

ஊராட்சிகளிலும் வருங்காலத்தில் உடற்பயிற்சிக் கூடம் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என அமச்சர் அறிவிப்பு.
அனைத்து ஊராட்சிகளிலும் உடற்பயிற்சி கூடங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊராட்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், சோழிங்கநல்லூர் தொகுதி, புதிய தோமையர் மலை ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் வருங்காலத்தில் உடற்பயிற்சிக் கூடம் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என தெரிவித்தார். அனைத்து ஊராட்சிகளிலும் ஆண்கள் மற்றும் பெண்கள் என தனித்தனியே உடற்பயிற்சி கூடம் அமைக்க அரசு முன் வருமா என்று சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025