மற்றவர்கள் மாதிரி இல்லை , தம்பி விஜய் மீது பேரன்பு உண்டு என்று சீமான் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் செய்தியாளருக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், சட்டமன்ற தேர்தலில் ரஜினி மற்றும் கமல் இருவருக்கும் கிடைக்கும் அடியில் விஜய் உள்ளிட்ட எந்த நடிகரும் அரசியலுக்கு வர பயப்பட வேண்டும் என்றும் எம்ஜிஆர், பிரபாகரன் மீது மதிப்பு வைத்திருந்தார் அதனால் தான் அவரை மதிக்கிறோம். மற்றபடி என்ன நல்லாட்சி செய்தார்? என கேள்வி எழுப்பினார்.
சீமான் இவ்வாறு பேசியது விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.மேலும் சீமானுக்கு எதிராக சமூக வலைத்தளமான ட்விட்டரில் #டுபாக்கூர்_சீமான் என்ற ஹேஷ் டேக்கை ட்ரெண்ட் செய்தனர்.இதனைத்தொடர்ந்து சீமானுக்கு ஆதரவாக #மக்கள்_தலைவர்_சீமான் என்ற ஹேஷ் டேக் ட்ரெண்டானது.
இந்நிலையில் இன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், விஜய் ரசிகர்கள் என்மீது கோபப்பட்டு என்ன ஆகப்போகிறது?என்று கேள்வி எழுப்பினார்.மேலும் தொடக்கத்தில் இருந்தே தம்பியை தற்காத்து நின்ற அண்ணன் என்று தெரியும்.மற்றவர்கள் மாதிரி இல்லை , தம்பி விஜய் மீது பேரன்பு உண்டு.குறைந்தபட்சம் சூர்யா அளவுக்காவது தம்பி விஜய் குரல் கொடுக்கட்டும் .மக்களுக்காக போராடி தம்பி விஜய் அரசியலுக்கு வரட்டும் என்று தெரிவித்துள்ளார்.
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…