ஹெலிகாப்டர் விபத்து குறித்து தகவல் தந்த இரண்டு பேருக்கு தலா ரூ.5,000 பரிசளித்தார் லெப்டினண்ட் ஜெனரல் அருண்.
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்த இரண்டு பேருக்கு தலா ரூ.5,000 பரிசளித்தார் தென்பிராந்திய லெப்டினண்ட் ஜெனரல் ஏ.அருண். இந்த விபத்து குறித்து தகவல் அளித்த கிருஷ்ணசாமி மற்றும் குமார் ஆகியோருக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்கி பாராட்டினார். மேலும், ஹெலிகாப்டர் விபத்தின்போது உதவிய நஞ்சப்பத்திரம் மக்களுக்கு நேரில் நன்றி தெரிவித்தார்.
கடந்த 8-ஆம் தேதி குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் நாட்டின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி 13 பேர் உயிரிழந்தனர். குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் 80 சதவீத தீக்காயத்துடன் மீட்கப்பட்டு பெங்களூரு விமானப்படை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.