, ,

அவருக்கு அவருடைய கவலை… முதல்வர் என்ன சொல்ல போகிறார்? – ப.சிதம்பரம் கேள்வி

By

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு குறித்து காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக அரசு கடந்த சட்டமன்றத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஓதுக்கீடு வழங்கியதை அடுத்து, ஒருபக்கம் சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்திய பிறகே உள் ஒதுக்கீடு செய்யவேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தாலும், மறுபக்கம் இது தொடர்பாக பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகிறது.

அதாவது, சமீபத்தில் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு அளித்திருப்பது இறுதியானது அல்ல, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகு நிரந்தரமான உள் ஒதுக்கீடு அளிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, பாமக நிறுவனர் ராமதாஸ் வன்னியருக்கான 10.5% உள் ஒதுக்கீடு சட்டம் நிரந்தரமானது என்றும் முதல்வரிடம் தொலைபேசியில் பேசிய போதும் கூட, வன்னியர் இட ஒதிக்கீடுக்காக இயற்றப்பட்ட சட்டம் நிரந்தமானது என கூறிஉயுள்ளார் என தெரிவித்து, சமூகநீதி குறித்து புரிதல் இன்றி சிலர் பேசி வருவதாக விமர்சித்தார்.

இந்த நிலையில், தற்போது இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு தற்காலிகமானது என்று துணை முதலமைச்சர் கூறுகிறார் என்றும் அவருக்குத் தென் மாவட்டங்களின் கவலை எனவும் சூசகமாக கூறியுள்ளார்.

இல்லையில்லை, 10.5 சதவிகிதம் நிரந்தரமானது என்று சட்ட அமைச்சர் கூறுகிறார். அவருடைய கவலை அவருக்கு, என்று கூறி, முதல்வர் என்ன சொல்லப்போகிறார்? என்றும் எல்லாவற்றுக்கும் மேலாக ‘ஒதுக்கீடு’ என்ற கொள்கையில் நம்பிக்கை இல்லாத பாஜக என்ன சொல்லப் போகிறது? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Dinasuvadu Media @2023