சிக்காத சிறுத்தை… அச்சத்தில் பொதுமக்கள்! 9 பள்ளிகளுக்கு லீவு..

cheetah

Mayiladuthurai: மயிலாடுதுறையில் தென்பட்ட சிறுத்தை இன்னும் சிக்காததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் செம்மங்குளம் என்ற பகுதியில் நேற்று முன்தினம் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இந்த புகாரை அடுத்து சிசிடிவி பதிவுகள் மூலம் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை காவல்துறையினர் உறுதி செய்தது பெரும் அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இதன்பின் சிறுத்தை நடமாட்டத்தை சிசிடிவி கேமராக்கள் மூலம் காவல்துறை கண்காணித்து வரும் நிலையில்,  பொதுமக்கள் வீடுகளை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதேசமயம் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டால் 9360889724 என்ற எண்ணிற்கு அழைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

சிறுத்தையை பிடிக்க காவல்துறையும், வனத்துறையும் வலைவீசி தேடி வருவதாக கூறப்பட்ட நிலையில், செம்மங்குளம் அருகே உள்ள தனியார் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக சிறுத்தையை பிடிக்க வனத்துறையும், காவல்துறையும் ஈடுபட்டு வரும், சிறுத்தை இன்னும் சிக்கவில்லை.

சிறுத்தை செம்மங்குளம் பகுதியில் இருந்து 3 கிமீ தொலைவை கடந்து ஆரோக்கியநாதபுரம் என்ற இடத்தில் பதுங்கி இருக்கலாம் என்றும் அல்லது வேறொரு இடத்திற்கு சென்று இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்து வன அலுவலர் அபிஷேக் தோமர் கூறியதாவது, சிறுத்தையை பிடிக்க 3 கூண்டுகள் மற்றும் வலைகள் வைக்கப்பட்டுள்ளது.

வன காவலர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் உள்ளிட்ட 10 குழுக்கள் அமைக்கப்பட்டு, அதிநவீன சென்சார் பொருத்திய கேமராக்கள் காட்டுப்பகுதியில் வைக்கப்பட்டு வலைவீசி தேடி வருகின்றனர் என்றார். எனவே, சிறுத்தை இன்னும் சிக்காததால் மயிலாதுறை பொதுமக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

இதன் காரணமாக, மயிலாடுதுறை நகரில் 9 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பாதுகாப்பு கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்