#Breaking:திமுக எம்.எல்.ஏவின் மகன் உட்பட 7 பேர் உயிரிழப்பு...!

Hosur DMK MLA The death of Prakash's son Karuna Sagar has come as a shock.

ஓசூர் திமுக எம்.எல்.ஏ. பிரகாஷ் என்பவரின் மகன் கருணா சாகர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓசூர் திமுக எம்.எல்.ஏ பிரகாஷ் என்பவரின் மகன் கருணா சாகர் (24) சென்ற ஆடி கார் பெங்களூரு அருகே விபத்தில் சிக்கியது.இந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

நள்ளிரவில் திமுக எம்எல்ஏ பிரகாஷ் என்பவரின் மகன் ஆடி சொகுசு காரில் பயணம் செய்து கொண்டிருந்த நிலையில்,பெங்களூரு கோரமங்கலா அருகே சாலை தடுப்பில் கார் மோதி விபத்துக்குள்ளானது.இதில் கருணா சாகரும்,அவருடன் பயணித்த 6 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்த தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் விபத்தில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்,விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

unknown nodeunknown node