“விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு எப்படி அனுமதி தர முடியும்?”- உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

கொரோனா பரவும் சூழலில், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு எப்படி அனுமதி தர முடியும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக, சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விநாயகர் சிலைகளை வைக்கவும் , ஊர்வலமாக எடுத்துச் செல்லவும், சிலைகளை கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இந்தநிலையில் ராஜபாளையம், மாப்பிள்ளை விநாயகர் கோவிலில் 5 விநாயகர் சிலைகள் வைத்து, 50 பேர் மட்டும் பங்கேற்புடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதிக்கோரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிபதி, ஒரு நாளில் சுமார் 6000 பேருக்கு கொரோனா பாதித்து வரும் சூழலில், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு எப்படி அனுமதி தர முடியும்? என கேள்வியெழுப்பினார்.
அதுமட்டுமின்றி, இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்து உயர்நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனவும், மனுதாரர் மனுவை திரும்பபெறவிட்டால், அதிக அபராதம் விதித்து, தள்ளுபடி செய்யநேரிடும் என நீதிபதி வலியுறுத்தினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025