உங்களுடன் தை பொங்கல் கொண்டாட தமிழகம் வருகிறேன் – ராகுல் காந்தி

Happy Pongal to all. Rahul Gandhi tweeted that he is coming to Tamil Nadu today to celebrate Thai Pongal with you.

அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். உங்களுடன் தை பொங்கல் கொண்டாட இன்று தமிழகம் வருகிறேன். மதுரையில் ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்கிறேன்.

இன்று தமிழகம் முழுவதும் தை திருநாளாம் பொங்கலை மக்கள் அனைவரும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். தமிழர் திருநாள் என்றாலே தமிழர்களின் வீரத்தை வெளிக்காட்டும் விதமாக பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில், மதுரை அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்வை காண்பதற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தமிழகம் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மதியம் 12 மணியளவில் மதுரை வருவார் என தெரிகிறது.

இந்நிலையில் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், தமிழர்களுக்கு பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதோடு, தான் தமிழகம் வரும் நிகழ்வு குறித்து தமிழில் டுவிட் செய்துள்ளார். இதுகுறித்து அந்த பதிவில் அவர் கூறியதாவது, ‘அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். உங்களுடன் தை பொங்கல் கொண்டாட இன்று தமிழகம் வருகிறேன். மதுரையில் ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.