மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை காலத்தில் பணியாற்றி வரும் மருத்துவ பணியாளர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் மாத காலத்திற்கு மருத்துவர்களுக்கு ரூ.30,000, செவிலியர்களுக்கு ரூ.20,000, இதர பணியாளர்களுக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துருந்தார்.
மேலும், உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்படும் என்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கு தலா ரூ.20,000 வழங்கப்படும் எனவும் உத்தரவிட்டிருந்தார். முதல்வரின் அறிவுப்பு வரவேற்கத்தக்கது என்று இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், கொரோனா போரில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர் மற்றும் பிற பணியாளர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு ரூ.15,000 முதல் ரூ.30,000 வரை ஊக்கத்தொகை. உயிரிழந்த 43 மருத்துவப் பணியாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
மருத்துவத்துறையினருக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்றும் அவர்களின் மற்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் நேற்று நான் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், இன்று இந்த அறிவிப்புகள் வெளியாகி இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. கொரோனா போரில் உயிரிழக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கு முந்தைய அரசால் அறிவிக்கப்பட்ட ரூ.50 லட்சம் இழப்பீடு பின்னர் ரூ.25 லட்சமாக குறைக்கப்பட்டது தவறு.
அதையே தற்போதைய முக ஸ்டாலின் தலைமையிலான அரசும் வழங்காமல் ரூ.50 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் மருத்துவர்களின் ஊதிய முரண்பாட்டை களைந்து ஊதிய உயர்வும், காலம் சார்ந்த பதவி உயர்வும் வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பிற கோரிக்கைகளையும் நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தியா vs பாகிஸ்தான் போர் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்த நிலையில், பாகிஸ்தான் அத்துமீறினால் நாங்கள் அதற்கு பதிலடி கொடுப்போம்…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர்…
அகமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தொடரின் 64-வது போட்டி நேற்று நரேந்திர மோடி…
சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 2-3 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…
சென்னை : தமிழ்நாட்டில் 2025-2026 கல்வியாண்டிற்காக அரசு, அரசு உதவி பெறும், மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 2, 2025 அன்று…
ராஜஸ்தான் : நேற்று தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி ராஜஸ்தான் பிகானரில் இருந்து காணொளி மூலம்…