எனக்கு ஆண்மை இல்லை – சி.பி.சி.ஐ.டி-யிடம் சிவசங்கர் பாபா பரபரப்பு வாக்குமூலம்!

Sivashankar Baba has given a sensational confession to the CPCIT police that he has no manhood.

தனக்கு ஆண்மை இல்லை என்று சிபிசிஐடி போலீசாரிடம் சிவசங்கர் பாபா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சுஷில் ஹரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபா மீது 3 போக்ஸோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில், சிபிசிஐடி போலீசார், சிவசங்கர் பாபா மீது 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையையும் ஏற்கனவே தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில், தனக்கு ஆண்மை இல்லை என சிபிசிஐடி போலீசாரிடம் சிவசங்கர் பாபா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆண்மை இல்லாத நான் எப்படி பாலியல் சொந்தரவுகளில் ஈடுபட முடியும் என்றும் தெரிவித்தாக கூறப்படுகிறது. இதே காரணத்தைக் கூறி  சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவையும் தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணையில், மகன் மற்றும் மகள் உள்ளபோது ஆண்மையற்றவர் என எப்படி கூற முடியும் என்று ஜாமீன் மனு மீதான வழக்கில் நீதிபதிகள் கேள்வி எழுப்பி, அவருடைய ஜாமின் மனுவை நிராகரித்தனர் என்பது குறிப்பிடப்படுகிறது.

எனக்கு ஆண்மை இல்லை – சி.பி.சி.ஐ.டி-யிடம் சிவசங்கர் பாபா பரபரப்பு வாக்குமூலம்!