நானும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வேன் – முதல்வர் பழனிசாமி

The corona vaccine is the result of Prime Minister Modi's diligence to ensure that the Indian people live in safety

இந்திய மக்கள்  பாதுகாப்பாக வாழ  வேண்டும் என பிரதமர் மோடி எடுத்த விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி தான் கொரோனா தடுப்பூசி என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை முதல்வர் பழனிசாமி அவர்கள் வைத்தார். முதல் கொரோனா தடுப்பூசியானது தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் டாக்டர் செந்திலுக்கு செலுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 166 மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.

இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதல்வர் பழனிசாமி, இந்திய மக்கள்  பாதுகாப்பாக வாழ  வேண்டும் என பிரதமர் மோடி எடுத்த விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி தான் கொரோனா தடுப்பூசி. நாட்டை பாதுகாக்க அனைவரும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்றும், நானும் தடுப்பூசி போட்டுக் கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.

நானும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வேன் – முதல்வர் பழனிசாமி