Tamil Nadu Chief Minister M K Stalin [Image Source : AFP]
ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு வரும் 23-ஆம் தேதி செல்ல உள்ளேன் என முதலமைச்சர் அறிவிப்பு.
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மிட்சுபிசி எலக்ட்ரிக் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நடைபெற்று வரும் நிகழ்வில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்பின், இந்நிகழ்வில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2024 ஜனவரியில் நடைபெற உள்ள முதலீட்டாளர்களை மாநாட்டுக்கு வருமாறு உலக முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்க உள்ளேன்.
முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுப்பதற்காக ஜப்பான் மற்றும் சிங்கப்பூருக்கு வரும் 23-ஆம் தேதி செல்ல உள்ளேன். ஏற்றுமதி மேம்பாட்டுக்காக தமிழ்நாடு அரசு பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன்படி, ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளில் முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் நான் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளில், தொழில்துறை நிகழ்ச்சிகள் தான் அதிகம் என தெரிவித்தார்.
மேலும், பெண்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்களை வரவேற்கிறோம்.தெற்காசியா அளவில் முதலீடுகளை ஈர்த்திட சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்க பெரும் முயற்சி எடுத்து வருகிறோம். ஜப்பான் – தமிழ்நாடு உறவை மேம்படுத்த பயணம் மேற்கொள்ள உள்ளேன் எனவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு முதல்வர் இவ்வாறு கூறினார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…