இன்று முதல் அதிமுகவில் தொடர்ந்து செயல்படுவேன்-சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி

இன்று முதல் அதிமுகவில் தொடர்ந்து செயல்படுவேன் என்று சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி தெரிவித்துள்ளார்.
ரத்தினசபாபதி உள்ளிட்ட 3 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.இன்று அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்தார். தினகரன் ஆதரவாளர் என கருதப்பட்ட ரத்தினசபாபதி முதலமைச்சரை தலைமை செயலகத்தில் சந்தித்தார்.பின்னர் சபாநாயகர் தனபாலை சந்தித்தார்.
முதல்வர், சபாநாயகரை சந்தித்தபின் சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், தடுமாறிப்போய் இருந்த என்னை மீண்டும் அதிமுகவில் இணைத்த பெருமை அமைச்சர் விஜயபாஸ்கரைத்தான் சேரும். மீண்டும் எம்எல்ஏவாக செயல்படுவேன். அமமுகவை பற்றி நான் இப்போது விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை.
டிடிவி தினகரனை மக்கள் புறக்கணித்துவிட்டனர்.எம்எல்ஏக்கள் பிரபு, கலைச்செல்வன் ஆகியோரும் விரைவில் அதிமுகவுக்கு வருவார்கள்.
தினகரன் அமமுக என்ற கட்சியை தொடங்கியவுடன் அவரிடம் இருந்து விலகிவிட்டேன்.பழையபடி கட்சி பணியாற்றுவேன்.இன்று முதல் அதிமுகவில் தொடர்ந்து செயல்படுவேன்.அதிமுகவை வலிமையுடன் நடத்த வேண்டும் என்பதே எங்களின் விருப்பம் ஆகும்.இந்த இயக்கம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று எண்ணியவன் நான் .சபாநாயகரை மரியாதை நிமிர்த்தமாக தான் பார்த்தேன் என்று தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025