வேறு மாதிரி என்றால், எந்த மாதிரி? டென்ஷனா எடப்பாடி பழனிசாமி!

பட்டாசு ஆலைப் பாதுகாப்பை உறுதி செய்யும் நிர்வாகத் திறன் இல்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி காட்டத்துடன் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கண்டனம் பதிவிட்டுள்ளார்.

edappadi palanisamy

சென்னை : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் நேற்று காலை 8:30 மணியளவில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த பட்டாசு ஆலையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட அறைகளில் 50-க்கும் மேற்பட்டோர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த விபத்தில் ஆலையில் இருந்த 5 அறைகள் இடிந்து தரைமட்டமானது. இதில் பேர் சம்பவ இடத்திலையே பலியாகினர். இதில், மகாலிங்கம்(55), செல்லப்பாண்டியன், ராமமூர்த்தி(38), ராமஜெயம் (27), வைரமணி(32) மற்றும் லட்சுமி ஆகியோர் விபத்தில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் ஆலை உரிமையாளர்களிடம் இருந்து பெற்று கொடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மாவட்ட எஸ்பி கண்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்படி இருந்தாலும் கூட யாரும் பின் வாங்கவில்லை. மாவட்ட எஸ்பி கண்ணன் மைக்கில், ஒழுங்கா இருக்கணும்.. கோஷம் போட்டா வேற மாதிரி ஆயிடும்  என மிரட்டும் பாணியில் பேசியது சர்ச்சையாக வெடித்துள்ளது. எனவே, இதற்கு எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில், வேறு மாதிரி என்றால், எந்த மாதிரி? மடப்புரம் அஜித்குமார் மாதிரியா? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி காட்டத்துடன் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது ” விருதுநகர் மாவட்டம் சின்னக்காமன்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், நிவாரணம் கோரி போராடிய மக்களைப் பார்த்து “ஒழுங்கா இருக்கணும், இல்லனா வேற மாதிரி ஆகிடும்” என்று விருதுநகர் எஸ்.பி. மிரட்டியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

வேறு மாதிரி என்றால், எந்த மாதிரி? மடப்புரம் அஜித்குமார் மாதிரியா? பட்டாசு ஆலைப் பாதுகாப்பை உறுதி செய்யும் நிர்வாகத் திறன் இல்லை; போராடும் மக்களின் கோரிக்கையைக் கேட்கக் கூட மனமில்லை; மக்களை மிரட்டவும், அச்சுறுத்தவும் மட்டும் மு.க.ஸ்டாலின் அரசின் குரல்கள் உயர்கின்றனவா? வரலாற்றுப் பாசிசம் தோற்றுவிடும் ஸ்டாலின் அரசின் கொடுங்கோன்மையிடம்! மக்களை மிரட்டுவது, வன்முறையை கட்டவிழ்த்து விடுவது , சட்டத்தை மீறி செயல்படுவதை எல்லாம் உடனடியாக கைவிட வேண்டும் என ஸ்டாலின் மாடல் அரசை எச்சரிக்கிறோம்” எனவும் காட்டத்துடன் பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்