கர்நாடகாவில் முழு அடைப்பு: எல்லையோர மாவட்டங்களுக்கு பறந்தது உத்தரவு!

karnataka

கர்நாடக மாநிலத்தில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாட்டில் 4 மாவட்ட எஸ்.பி-களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள டிஜிபி சங்கர் ஜிவால் ஆணையிட்டுள்ளார்.

காவிரி நீர் விவகாரத்தில் தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே நீண்ட காலமாகவே  பல்வேறு கருத்து மோதல்கள் அரங்கேறி வருகின்றன. உச்சநீதிமன்ற உத்தரவு படி, கர்நாடக அரசு காவிரியில் இருந்து தமிழகத்துக்கு உரிய அளவு தண்ணீர் திறக்க வேண்டும் என தமிழக அரசு தொடர் கோரிக்கை வைத்து வருகிறது.

அனால் கர்நாடக அரசு, காவிரியில் போதிய அளவு தண்ணீர் இல்லை அதனால் தண்ணீர் திறந்துவிட முடியாது என திட்டவட்டமாக மறுத்து வருகின்றன. இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணைய தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பதை எதிர்த்து, கன்னட அமைப்புகள் கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. தற்போது, அங்கு முழு அடைப்பை ஒட்டி, பெங்களூரு நகரில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டில் இருந்து கர்நாடக மாநில எல்லைவரை மட்டுமே வாகனங்கள் இயக்கப்படுகிறது.

இதற்கிடையில், கர்நாடக மாநில எல்லை மாவட்டங்களான 4 தமிழக மாவட்டங்களில் கண்காணிப்பாளர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க டிஜிபி சங்கர் ஜிவால் ஆணையிட்டுள்ளார்.

அதன்படி, தருமபுரி, ஈரோடு, சேலம் மற்றும் நீலகிரி மாவட்ட எஸ்.பி-க்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இரு மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து குறித்த சந்தேகங்களுக்கு 9498170430, 9498215407 தொடர்பு கொள்ளலாம்  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்