கரூரில் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் மீண்டும் சோதனை…

கரூரில் மீண்டும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் ஏற்கனவே கடந்த மே மாதம் சோதனையில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரூரில் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய, அவரது நண்பர் கொங்கு மெஸ் மணி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே கடந்த மே மாதம் 8 நாட்கள் கரூரில் சோதனை நடைபெற்று, சில இடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.