#BREAKING: தமிழகத்தில் ஒரே நாளில் 5,709 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!

தமிழகத்தில் புதிதாக 5,709 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 3,49,654 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,709 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, தமிழகத்தில் மொத்தமாக 3,49,654 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 1,182 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தம் எண்ணிக்கை 1,19,059 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் இன்று 121 பேர் பலியாகியுள்ளனர். அதில், 32 பேர் தனியார் மருத்துவமனையிலும், 89 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6007 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று 5850 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 2,89,787 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்தக் கூட்டணியில் தொடரணுமா?” விசிக, கம்யூ. கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு.!
July 16, 2025
சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!
July 16, 2025
நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
July 16, 2025