#BREAKING : தூத்துக்குடியில் உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி – முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடியை கைது செய்யும் முயற்சியில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டு உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.