சூப்பர் சரவணா ஸ்டோர்ஸில் வருமான வரித்துறை நடத்திய சோதனை நிறைவு!

தி நகர், புரசைவாக்கம், போரூர், குரோம்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்களில் நடந்த சோதனை நிறைவு பெற்றது.
சூப்பர் சரவணா ஸ்டோர்ஸில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்து, தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்ததாக வருமானவரித் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சென்னை தியாகராய நகர், புரசைவாக்கம், குரோம்பேட்டை, போரூர் ஆகிய பகுதிகளில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர் கடைகளில் கடந்த புதன்கிழமை காலை 8.30 மணி முதல் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தது.
இந்நிலையில், கடந்த 4 நாட்களாக சூப்பர் சரவணா ஸ்டோர்ஸில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை நிறைவு பெற்றது. இதுவரை நடந்த சோதனையில் கைப்பற்றப்பட்டவை குறித்த விவரங்களை இன்னும் அதிகாரிகள் விவரிக்கவில்லை.
லேட்டஸ்ட் செய்திகள்
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!
May 12, 2025
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
May 12, 2025