IncomeTax : சென்னையில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை..!

சென்னையில் 30-க்கும் மேற்பட்ட பல்வேறு இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பொன்னேரி வெள்ளி வாயில் சாவடியில் ராதா இன்ஜினியரிங் நிறுவனத்தில் வரி ஏய்ப்பு தொடர்பாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, நீலாங்கரை, எண்ணூர், ஓஎம்ஆர், நாவலூர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வரி ஏய்ப்பு செய்ததாக தொழில் நிறுவனங்களில் வருமானத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ள நிலையில் 4 தனியார் நிறுவனங்களிலும், அதற்கு சொந்தமான இடங்களிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025