அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு – அன்பில் மகேஷ்

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 47 லட்சத்திலிருந்து, 53 லட்சமாக அதிகரித்துள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 47 லட்சத்திலிருந்து, 53 லட்சமாக அதிகரித்துள்ளது. அரசு தொடக்கப்பள்ளிகளில் ரூ.150 கோடி செலவில், 7,500 திறன் வகுப்பறைகள் உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், அரசு மேல்நிலை வகுப்புகளில் கணினி அறிவியல் பாடத்தை விருப்ப பாடமாக பயிலும் மாணவர்களிடம் 2022 -23ம் கல்வி ஆண்டில் இருந்து ரூ.200 தனி கட்டணம் வசூலிக்கப்படுவது முழுமையாக ரத்து செய்யப்படும். கிராம, நகர பகுதிகளில் நூலக சேவை பெறாத இடங்களில் நூலக நண்பர்கள் என்ற புதிய திட்டம், தன்னார்வலர்கள் வாயிலாக செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடப்பாண்டில் 9,494 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 15,000 ஆசிரியர் காலி இருந்தாலும் நடப்பாண்டில் 9,494 பேர் புதிதாக தேர்வு செய்யப்படுவர் என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்” – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!
July 7, 2025
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் : 58 ஆண்டுகள்.., வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த இந்தியா.!
July 7, 2025