இபாஸ் முறை எளிதாக்கப்பட்டதை அடுத்து சென்னைக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்தது. இதனால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். உண்மையான காரணங்கள் கூறிய பின்னரும் இ-பாஸ் மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் பல எழுந்ததை அடுத்து, ஆதார் கார்டு, குடும்ப அட்டை ஆகியவற்றை காட்டி இ-பாஸ் எளிதாக வாங்கலாம் என்று முதல்வர் அறிவித்திருந்தார்.
அதன்படி கடந்த திங்கட்கிழமை மட்டும் மட்டும் ஒரே நாளில் 1.20லட்சம் பேருக்கு இ-பாஸ் வழங்கப்பட்டதாக தமிழக அரசு அறிவித்தது. தற்போது இ-பாஸ் முறை எளிமையாக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்டம் விட்டு மாவட்டம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் சென்னையில் இருந்து சென்று விட்டு திரும்பி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் இ-பாஸ் தளர்வால் சென்னைக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் இதர மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருபவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பின் அவர்கள் கண்டிப்பாக 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும், அதில் எந்த தளர்வும் வழங்கப்படாது என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…
ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…
திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…
அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…
அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…