ஒரு நாட்டின் குடிமக்கள் உரிமை,தேர்தல் நடைமுறை,அரசியல் கலாச்சாரம்,அரசாங்கத்தின் செயல் மற்றும் அரசியல் கலாச்சாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் சர்வதேச ஜனநாயக குறியீடு பட்டியல் வெளியிடப்படுகிறது.இதற்கான பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது பொருளாதார புலனாய்வு பிரிவு (Economist Intelligence Unit).அந்தவகையில் 2019 ஆம் ஆண்டிற்கான வெளியிடப்பட்ட ஜனநாயகக் குறியீட்டின் பட்டியலில் இந்தியாவை குறைபாடுள்ள ஜனநாயகம் என்று தெரிவித்துள்ளது.குறிப்பாக குடிமக்கள் விவகாரம் தான் ஜனநாயக பின்னடைவுக்கு முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய ஜனநாயக அட்டவணையில் இந்தியா 10 இடங்கள் சரிந்துள்ளது.கடந்த 2018-ஆம் ஆண்டு இந்தியா 7.23 புள்ளிகள் பெற்று 41-வது இடத்தில் இருந்தது.எனவே 2019 -ஆம் ஆண்டு 6.90 ஆக குறைந்து 51-வது இடத்திற்கு சரிந்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து திமுக எம்.பி.கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,உலக ஜனநாயக குறியீட்டில், இந்தியா ஒரே ஆண்டில் 10 இடங்கள் கீழிறங்கியிருப்பது, இந்தியாவில் உரிமைகள் எப்படி பறிக்கப்பட்டு வருகின்றன என்பதை உணர்த்துகிறது. ஒரு வலிமையான ஜனநாயக நாடாக இருந்த இந்தியா ஒரு பாசிச நாடாக மாற்றப்பட்டு வருகிறது என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…