மேயருக்கு மறைமுக தேர்தல் – தமிழக அரசு அவசர சட்டம்

மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.
மாநகராட்சி மேயர் பதவிக்கு முதலில் மறைமுகமாக நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதாவது ஒரு மாநகராட்சியின் மேயரை தேர்ந்தெடுக்க கவுன்சிலர்கள் ஒட்டு போட்டு தேர்ந்தெடுப்பார்கள்.
1986- ஆம் ஆண்டு முதல் 2001-ஆம் ஆண்டு வரை நேரடி தேர்தல் முறையும், 2006-ஆம் ஆண்டு மறைமுக தேர்தல் முறையும் பின்பற்றப்பட்டது. கடைசியாக 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் மேயரை தேர்ந்தெடுக்க நேரடி தேர்தல் முறை கொண்டுவரப்பட்டது.மாநகராட்சி மேயரை தேர்ந்தெடுக்க மீண்டும் மறைமுக தேர்தல் முறையை அமல்படுத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசர சட்டத்தை பிறப்பித்தது தமிழக அரசு.இதேபோல் நகர்மன்ற, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கும் மறைமுக தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!
May 7, 2025
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025