#Breaking: "கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டதற்கு இடைக்கால தடை"- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

Chennai hc ordered an interim stay on the appointment of former chief secretary Girija Vaidyanathan as a member of National Green Tribunal.

தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணர் குழு உறுப்பினராக முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நியமனத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய பசுமை தீர்ப்பாய நிபுணர் குழுவில் தமிழகத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனைதொடர்ந்து அவர் வரும் 19-ம் தேதி தனது பதவியை ஏற்க இருந்தார். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்வில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், கிரிஜா வைத்தியநாதன் நியமத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், கிரிஜா வைத்தியநாதன் தகுதி குறித்து தலைமை நீதிபதி அமர்வு அதிருப்தி தெரிவித்தது. அதுமட்டுமின்றி, சட்டப்படி தேவைப்படும் தகுதியை கிரிஜா வைத்தியநாதன் பெற்றிருக்கவில்லை என்றும் தலைமை நீதிபதி அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.