அரசே ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான தளவாடத்தை பயன்படுத்தினால், அதை நாம் வரவேற்க கடமைப்பட்டிருக்கிறோம்.
தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை, ஆக்சிஜன் உற்பத்திக்காக மீண்டும் திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் திறக்க அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ள நிலையில், ஆலையை திறக்கக்கூடாது என்று தமிழக அரசு கடும் எதிர்ப்புகளை தெரிவித்தது. மேலும் இதுதொடர்பாக, தமிழக முதல்வர் இன்று அனைத்துக்கட்சிகளுடனும் ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறார்.
இந்நிலையில், ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலை திறப்பது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் கூறுகையில், ‘ ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பதை, நாம் வேண்டாம் என்று வெளிப்படையாக சொல்ல இயலாது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு ஆளும் கட்சியினர் உற்ற துணையாய் இருக்கிறார்களோ? என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது.
உச்சநீதிமன்றம் என்ன பதிலை அளிக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். அரசே ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான தளவாடத்தை பயன்படுத்தினால், அதை நாம் வரவேற்க கடமைப்பட்டிருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…