சுபஸ்ரீயின் உயிர் பறிக்கப்பட்டு 9 நாட்கள் ஆகிவிட்டது !எங்கே குற்றவாளி? மு.க.ஸ்டாலின் கேள்வி

Published by
Venu

சுபஸ்ரீயின் உயிர் பறிக்கப்பட்டு இத்தனை நாளாகியும், குற்றவாளியைக் கைது செய்யாமல் காப்பாற்றி வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி சென்னையில் உள்ள பள்ளிக்கரணையில் பேனர் விழுந்ததில் ஸ்கூட்டியில் வந்த  சுபஸ்ரீ என்ற இளம்பெண் நிலை தடுமாறி கீழே விழுந்து பின்னே வந்த லாரி அவர்  மீது மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இதனையடுத்து  சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு  பல்வேறு அரசியல்  கட்சித் தலைவர்களும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான ஜெயகோபால் மீது  304(A), 279, 336 ஆகிய பிரிவுகளில் முதலில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின் ஜெயகோபால் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவான 308-ன் கீழ் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.ஆனால் தற்போது வரை அவர் கைது செய்யப்படவில்லை.

இந்த நிலையியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.அவரது பதிவில்,  சுபஸ்ரீயின் உயிர் பறிக்கப்பட்டு இத்தனை நாளாகியும், குற்றவாளியைக் கைது செய்யாமல் காப்பாற்றி வருவது சட்ட விரோதம்,காவல் நிலைய பாத்ரூமில் பலரும் வழுக்கி விழுந்து மாவுக்கட்டு போடும் நிலையில், ஆளுங்கட்சிப் பிரமுகர் மீது தூசு கூடப் படாமல்  சென்னை காவல்த்துறை காப்பாற்றுவது யாருக்காக? என்று பதிவிட்டுள்ளார்.

Published by
Venu

Recent Posts

SRH vs DC : குறுக்கே வந்த கௌசிக்(மழை).., பிளே ஆப் வாய்ப்பை இழந்த ஹைதராபாத்.!

SRH vs DC : குறுக்கே வந்த கௌசிக்(மழை).., பிளே ஆப் வாய்ப்பை இழந்த ஹைதராபாத்.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…

1 hour ago

ஹைதராபாத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.., போட்டி தொடங்குவதில் தாமதம்.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

2 hours ago

SRH vs DC : 3 விக்கெட்களை தூக்கிய கம்மின்ஸ்.., ரன் எடுக்க முடியாமல் திணறிய டெல்லி.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

3 hours ago

”மே 5ம் தேதி வணிகர் தினம்.., வணிகர்களுக்கு 6 அறிவிப்புகள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…

3 hours ago

நடிகர் கவுண்டமணியின் மனைவி உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி.!

சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…

4 hours ago

SRH vs DC : வெற்றி யாருக்கு? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…

5 hours ago