இன்று முதல் இரண்டாம் கட்டமாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார்.
2021 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் வெகு விரைவில் நெருங்கிவரும் நிலையில், தற்போது அரசியல் கட்சிகள் தங்களுக்கான தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டன. இதனிடையே , ரஜினியும் ஜனவரி மாதம் கட்சி துவங்குவதாக அறிவித்துள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த சட்டமன்ற தேர்தல் குறித்த பிரச்சாரத்தில் கடந்த 13-ஆம் தேதி முதல் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். முதல் கட்டமாக சீரமைப்போம் தமிழகத்தை எனும் பெயரில் தூத்துக்குடி கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரத்தை கமல்ஹாசன் மேற்கொண்டார்.இந்நிலையில் கமல்ஹாசனின் இரண்டாம் கட்ட தேர்தல் பரப்புரை திட்டம் வெளியாகியுள்ளது.இன்று முதல் 6 மாவட்டங்களில் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார்.
அதாவது, இன்று ,நாளை ,நாளை மறுநாள் காஞ்சிபுரம்,விழுப்புரம் ,திருவள்ளூர் ,செங்கல்பட்டு ,திருவண்ணாமலை,கடலூர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் கமல்ஹாசன்.அனைவரும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி கலந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…