24 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் கருப்பசாமியின் உடல் அடக்கம்..!

Karuppasamy's body was buried with military honors in his hometown of Thittangulam after 24 bombs exploded.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகில் உள்ள திட்டங்குளத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்ற ராணுவ வீரர் கடந்த 19-ம்தேதி காஷ்மீர் லடாக் பகுதியில் வாகனத்தில் வெடிபொருட்களை ஏற்றிச் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து, கருப்பசாமி உடல் டெல்லியில் இருந்து இன்று தூத்துக்குடி விமான நிலையத்துக்கு கொண்டு வரப்படுகிறது.விமான நிலையத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. மாநகராட்சி ஆணையர், மற்றும் ராணுவத்தினர் மலரஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, கருப்பசாமியின் சொந்த ஊருக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர்,  கருப்பசாமியின் உடல் அவரது சொந்த ஊரான திட்டங்குளத்தில் 24 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.