மனைவியை கொன்று மகளுக்கு பாலியல் வன்கொடுமை.., தந்தைக்கு மரண தண்டனை..!

A judge has sentenced a father to death for killing his wife and sexually abusing his daughter.

மனைவியை கொன்று தன் மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

புதுக்கோட்டை அருகே முருகேசன் என்பவருக்கு மூன்று மனைவிகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2009ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டாவது மனைவி பானுமதி என்பவர் முருகேசன் கொலை செய்துள்ளார். இந்த கொலை குறித்து அவரிடம் விசாரித்த போது இரண்டாவது மனைவியின் 17 வயது மகளை தொடர்ந்து பாலியல் கொடுமை செய்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை செய்ய இடையூறாக பானுமதி இருந்ததால் கொலை செய்ததாக போலீசாரிடம் தெரிவித்தார். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், மனைவியை கொன்று தன் மகளை பாலியல் வன்கொடுமை செய்த முருகேசனுக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

மேலும், மரண தண்டனை உடன் ஒரு ஆயுள் தண்டனை, 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் 3 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.