கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு – எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் போலீசார் விசாரணை!

Police are investigating estate manager Natarajan for further investigation in the Kodanad murder and robbery case.

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கூடுதல் விசாரணைக்காக எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் போலீசார் விசாரணை.

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக சயானிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், தற்போது எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் மீண்டும் விசாரணை நடைபெற்று வருகிறது. உதகை பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வழக்கறிஞருடன் எஸ்டேட் மேலாளர் நடராஜன் கூடுதல் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்.

மேற்கு மண்டல ஐஜி சுதாகர், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத் மற்றும் ஏ.டி.எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மேலாளர் நடராஜனிடம் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்க மேலும் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று ஏடிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், இன்று மேலும் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் கோடநாடு வழக்கு விசாரணை உதகை நீதிமன்றத்தில் அடுத்த மாதம் 1ம் தேதிக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.