ஓ.பன்னீர்செல்வம்,எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உங்களை காத்து உலகாளும் பரந்தாமன் பகவான் மகா விஷ்ணு ஸ்ரீ கிருஷ்ணராக அவதாரம் எடுத்த திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எங்கள் இனிய ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம். கிருஷ்ணர் அவதரித்த இந்த இனிய நாளில் குழந்தைகளை கிருஷ்ண பகவான் போல் அலங்கரித்தும், அவர்களின் பிஞ்சு பாதங்களை மாவில் நனைத்து கால் தடங்களை வீட்டு வாசலில் இருந்து வரிசையாக பதியவைத்து பார்ப்பவரின் கண்களுக்கு அந்த குழந்தை கிருஷ்ணனை கிருஷ்ண ஜெயந்தி அன்று ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் கால்தடம் பதித்து நடந்து வந்தது போல தெரியும் வண்ணம் அலங்காரம் செய்து கோலமிட்டு பலகாரங்கள், பால், தயிர், வெண்ணெய் பழ வகைகளை படைத்து ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்டு மகிழ்ச்சியடைவர்.
இல்லங்கள் தோறும் மகிழ்ச்சிப் பெருக்கை கொண்டுவரும் திருநாளான ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் அன்பும், அமைதியும் ,இனிமையும் எங்கும் பெருக வேண்டும் என்ற எங்களுடைய விருப்பத்தை தெரிவித்து அனைவருக்கும் ,புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி அம்மா அவர்கள் ஆகியோரது வழியில் எங்களது உளங்கனிந்த ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…