காலில் அறுவை சிகிச்சை- மருத்துவமனையில் இருந்து கமல்ஹாசன் டிஸ்சார்ஜ்!

Kamal Haasan, the actor and leader of the makkal neethi maiyam, was discharged today after undergoing surgery on his right leg.

நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு வலது காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வலது காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, மற்றொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய காரணத்தினால், கடந்த 18 ஆம் தேதி சென்னை, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கமல்ஹாசன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனைதொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அந்தவகையில், காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு,மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.