சமூக ,பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மாநிலங்களின் வளர்ச்சியை மதிப்பீடு செய்து ,தர வரிசை பட்டியலை தயாரித்தது நிதி ஆயோக். 2019 -ஆம் ஆண்டிற்கான நிலையான வளர்ச்சி இலக்கு பட்டியலை நிதி ஆயோக் வெளியிட்டது.இந்த பட்டியலில் கேரள மாநிலம் 70 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றுள்ளது.2 -வது இடத்தில் 69 புள்ளிகளுடன் இமாசலப் பிரதேசம் உள்ளது.3-வது இடத்தில் 67 புள்ளிகளுடன் தமிழ்நாடு,ஆந்திரா,தெலுங்கானா மாநிலங்கள் உள்ளது.
வறுமையின்மை பட்டியலில் 72 புள்ளிகள் பெற்று தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.பசியின்மையில் 10-வது இடத்தில் உள்ளது.உடல் நலத்தில் 76 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.கல்வித்தரத்தில் 70 புள்ளிகள் பெற்று நான்காம் இடத்தில் உள்ளது.பாலின சமநிலையில் 12-வது இடம்,சுத்தமான குடிநீர் 7 வது இடம் ,எரிசக்தி 4-வது இடம் ,பணி மற்றும் பொருளாதார வளர்ச்சியில் 6-வது இடத்தில் உள்ளது.தொழில்த்துறை,புதுமை கண்டுபிடிப்பு மற்றும் உள்கட்டமைப்பில் 14-வது இடத்தில் உள்ளது.சமநிலையின்மையை குறைப்பதில் 16-வது இடத்தில் உள்ளது.ஒட்டுமொத்த பட்டியலில் தான் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது.மேலும் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலிலும் கேரளா முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…