சிறுமிக்கு பாலியல் தொல்லை..! பரதநாட்டிய ஆசிரியர் கைது..!

சென்னை ஆவடி அடுத்த உள்ள கிறிஸ்து காலனியில் அன்னை தெரசா 3-வது காலனியை சார்ந்த ரவிவர்மா (53).இவர் கடந்த 6 வருடமாக தனது வீட்டில் பரதநாட்டிய பள்ளி நடத்தி வருகிறார்.
இவரது நாட்டியபள்ளியில் அதே பகுதியை சார்ந்த 11 வயது சிறுமி ஒருவரும் பரதநாட்டிய பள்ளி பயின்று வந்து உள்ளார்.கடந்த 29-ம் தேதி பரதநாட்டிய பள்ளிக்கு வந்த அந்த சிறுமியை ரவிவர்மா தனியாக அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்தாததாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் பரதநாட்டிய பள்ளிக்கு செல்லமாட்டேன் என கூறி அழுது உள்ளார்.அப்போது சிறுமியிடம் ஏன் என விசாரித்தபோது தனக்கு ரவிவர்மா பாலியல் தொந்தரவு கொடுத்ததை கூறினார்.
பின்னர் அந்த சிறுமியின் பெற்றோர் உட்பட 50 க்கும் மேற்பட்டோர் பரதநாட்டிய பள்ளியை முற்றுகையிட்டு ரவிவர்மாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் ரவிவர்மாவை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
பின்னர் அந்த சிறுமியின் பெற்றோர் அம்பத்தூர் துணை கமிஷனர் ஈஸ்வரனிடம் புகார் கொடுத்தனர்.அவர் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு நடவடிக்கை எடுக்கும் படி உத்தரவு விட்டார்.
இதை தொடர்ந்து ரவிவர்மாவை போக்சோ சட்டத்தில் கைது செய்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் ரவிவர்மாவை அடைத்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025