Live : சர்வதேச ஆஸ்கர் விருதுகள் முதல்.., உள்ளூர் அரசியல் நிகழ்வு வரையில்…
97வது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வுகள் முதல் பல்வேறு உள்ளூர், உலக அரசியல் நிகழ்வுகள் வரையில் பல்வேறு செய்திகளை இதில் காணலாம்.

சென்னை : இன்று அமெரிக்கா லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் 97வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. இதில் உலகளவில் கடந்த ஆண்டு வெளியாகிய திரைப்படங்களில் இருந்து சிறப்பான திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டது. இதில் பன்னாட்டு திரைக்கலைஞர்கள் பங்கேற்று விருதுகளை பெற்றனர்.
இன்று, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் தொடங்குகிறது. இதற்காக தமிழகம், புதுச்சேரியில் 3,316 தேர்வு மையங்கள் உள்ளன. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தம் 7518 பள்ளிகளை சேர்ந்த 8.21 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.