,

தனியார் பள்ளிகளில் கட்டமின்றி எல்.கே.ஜி : 20-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்…!

By

தனியார் பள்ளிகளில் கட்டமின்றி எல்.கே.ஜி வகுப்புகளில் சேர்வதற்கு 20-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படையில் அனைத்து தனியார் பள்ளிகளிலும் அரசு ஒதுக்கிய 25 சதவீத இடங்களில் எல்கேஜி மற்றும் ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுஸ். இதன் மூலமாக சேரக்கூடிய மாணவர்கள் எட்டாம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாக படிக்க முடியும்.

இந்நிலையில் தற்பொழுதும் தனியார் பள்ளியில் எல்கேஜி வகுப்புகளில் இலவசமாக சேர விரும்புவோருக்கு வருகின்ற 20-ஆம் தேதி முதல் ஆன்லைன் பதிவு தொடங்குகிறது. மாணவர்களுக்கான விண்ணப்பங்களை rte.tnschools.gov.in எனும் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் எனவும், வருகிற மே 18ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் மெட்ரோ பள்ளி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

Dinasuvadu Media @2023