#BREAKING: உள்ளாட்சி தேர்தல் – திமுக -காங்கிரஸ் பேச்சுவார்த்தை..!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்களுடன் அறிவாலயத்தில் ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதைத்தொடர்ந்து, அனைத்து கட்சிகளும் இட ஒதுக்கீடு பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்நிலையில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு , அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். மேலும், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலையும் பங்கேற்றுள்ளனர். இதைத்தொடர்ந்து, சற்று நேரத்தில் காங்கிரஸ்- திமுக உள்ளாட்சி தேர்தல் இட ஒதுக்கீடு பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடுபவர்கள் வேட்புமனு தாக்கல் செய்கின்றன.
சனிக்கிழமையான நாளையும் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். பிப்ரவரி 4-ஆம் தேதி மாலை 5 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.