தமிழக மாநில தேர்தல் ஆணையம் ,முதல் கட்ட தேர்தல் டிசம்பர் 27ஆம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் டிசம்பர் 30ம் தேதியும் நடைபெறும் என்று அறிவித்தது.மாநகராட்சி,பேரூராட்சி,நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் தற்போது நடைபெறவில்லை என்று அறிவித்தது. உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு முறையை சரியாக பின்பற்றவில்லை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் திமுக மற்றும் காங்கிரஸ் வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என தீர்ப்பளித்தது.மேலும் 9 புதிய மாவட்டங்களில் 3 மாதங்களுக்குள் வார்டு மறுவரையறை பணிகளை முடிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதன் பின்பு உள்ளாட்சித் தேர்தலுக்கு புதிய அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான தீர்ப்பில் சில சந்தேகங்கள் உள்ளதாக தி.மு.க. தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்றும், ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த தடை எதுவும் இல்லை என்றும் வழக்கை விசாரித்த நீதிபதிகள் தெரிவித்தனர்.
கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசன விவகாரம் தொடர்பாக, கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து சென்னை உயர்…
சென்னை : தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய 2 மாதத்தில் இயல்பிற்கு அதிகமாக மழைப் பொழிவு பதிவாகும் என…
சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்தார். இன்று காலையில்…
சென்னை : இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிகார்பூர்வமாக அறிவித்தார். சமீபத்தில்,…
ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதிப்…
நெல்லை : தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (வயது…