உள்ளாட்சித் தேர்தல் -அதிமுகவுடன் தேமுதிக ஆலோசனை

- உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்து போட்டியிடவுள்ளது.
- அதிமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்துகிறது தேமுதிக.
மக்களவை தேர்தலில் தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது.இதனையடுத்து நடைபெற்ற நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேமுதிகவினர் பிரச்சாரம் மேற்கொண்டனர்.இந்த பிரச்சாரம் மிகவும் வெற்றிகரமாக இருந்தது.
தமிழகத்தில் நீண்ட நாட்களாக நடைபெறாமல் இருந்த உள்ளாட்சித் தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.ஆனால் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் 9 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் தேர்தல் நடத்தலாம் என்று தீர்ப்பு அளித்தது.இதன் காரணமாக மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலுக்கான புதிய தேதியை அறிவிக்க உள்ளது.
இந்த நிலையில் அதிமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த தேமுதிகவில் இருந்து பார்த்தசாரதி, அழகாபுரம் மோகன்ராஜ் ஆகியோர் அதிமுக தலைமை அலுவலகம் சென்றுள்ளனர்.ஏற்கனவே உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி என்று தேமுதிக தெரிவித்தது.மேலும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை மேற்கொள்ள சுதீஷ் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.அந்த குழுவில் இளங்கோவன்,மோகன்ராஜ்,பார்த்தசாரதி ,அக்பர் உள்ளிட்டோர் இடம்பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025